எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, செப்.12  இலங்கை தமிழர் களுக்கு கூட்டாட்சி முறையே தேவை. இலங்கையை துண்டாட நாங்கள் விரும் பவில்லை என்று வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை தலைமையிடமாக கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மை யாக வசித்து வருகிறார்கள். அம்மாகா ணத்தில் தமிழ் தேசிய கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல் அமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பணியாற்றி வருகிறார்.

அதிபர் சிறிசேனாவுடன் தமிழ் தேசிய கூட்டணி இணக்கமாக செயல்பட்ட போதிலும், விக்னேஸ்வரன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தென்பகுதியில் உள்ள கண்டியில் பிரபல புத்த துறவி மகாநாயகே தேராவை விக் னேஸ்வரன் சந்தித்தார். தமிழர்கள் சந்திக் கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

பின்னர், விக்னேஸ்வரன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது: தமிழர்கள் சந்திக்கும் பிரச்சி னைகளை மகாநாயகே தேரா உணர்ந்து கொண்டார். இலங்கையில் உள்ள சிறு பான்மை தமிழர்கள், தங்கள் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள கூட்டாட்சி முறை வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், கூட்டாட்சி முறை வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம், நாங்கள் இலங்கையை துண்டாட முயற்சிப்பதாக பெரும் பான்மை சிங்களர்கள் குற்றம் சாட்டு கிறார்கள். எங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். ஆனால், நாங்கள் இலங்கையை துண்டாட விரும்பவில்லை. கூட்டாட்சி முறையை மட்டுமே கேட்கி றோம். தமிழர்கள் வேறு ஒரு தேசிய இனம் என்பதை சிங்களர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ் வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

************

வடகொரியாவில் அணுகுண்டு சோதனை வெற்றி விழா
விஞ்ஞானிகளுக்கு விருந்து அளித்து கவுரவிப்பு

சியோல், செப்.12  வடகொரியா கடந்த 3ஆம் தேதி 6ஆவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதன் காரணமாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்ப தற்கான வரைவு மசோதாவை அமெரிக்கா தயாரித்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் இடையே சுழற்சிக்கு விட் டுள்ளது. ஆனால் வடகொரியா எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை.

இந்த நிலையில் அணுகுண்டு சோதனை வெற்றி விழாவை வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் நடத்தி உள்ளார். விஞ்ஞானிகளை அவர் மனமார பாராட்டினார். அப்போது அவர்,  சமீபத்தில் நடத்திய ஹைட்ரஜன் குண்டுசோதனை அபார வெற்றி பெற் றிருக்கிறது. இது வட கொரிய மக்களின் ரத்தத்தை விலையாகக் கொடுத்து பெற்ற வெற்றி என்று கூறினார்.

விழாவின் போது இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. விஞ்ஞானிகளுக்கு கிம் ஜாங் அன் விருந்து அளித்து கவுரவித்தார். அது மட்டுமின்றி விஞ்ஞானிகளுடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் என வடகொரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

இந்த வெற்றி விழா எப்போது நடந் தது என கூறப்படவில்லை. இருப்பினும் இது வெகு சமீபத்தில் நடந்திருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner