எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லிஸ்பன், ஜூன் 19- போர்சுகல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந் துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் கடைப் பிடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அய்ரோப்பா கண்டத்தின் தென்பகுதியில் உள்ள போர்ச் சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கு வனப் பகுதியில் நேற்று திடீரென்று காட்டுத்தீ உண்டானது.

மளமளவென பரவிய தீ, காட்டில் இருந்த மரங்களை அழித்ததுடன் காட்டின் ஓரமாக செல்லும் சாலையோரம் இருந்த மரங்களையும் பற்றியது. இத னால் அந்த சாலை வழியாக வாகனங்களில் கடந்து சென்ற வர்கள் எரிந்த நிலையில் சாலையில் விழுந்த மரங்களால் முன்பக்கமோ, பின்பக்கமோ போக முடியாமல் சாலையின் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தவாறு முன்னே றிச் சென்று கொண்டிருந்த நிலை யில் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 40-க்கும் அதிகமா னோர் காரின் உள்ளேயே உடல் கருகி இறந்தனர். படுகாயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 பேர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தனர். பல ரது உடல்நிலை கவலைக்கிட மாக இருப்பதால் உயிரிழந் தோர் எண்ணிக்கை அதிகரிக் கலாம் என தகவல்கள் தெரி விக்கின்றன.

இது போன்ற கொடூர சம் பவத்தை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை என அந் நாட்டுப் பிரதமர் கவலையுடன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வர்களுக்கு மரியாதை செலுத் தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner