எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரஸ், ஜூன் 19- பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி  வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது.

சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி ஓராண் டுக்குள் வெற்றி வாகை சூடி னார்.

அதிபர் தேர்தல் முடிந்த தையொட்டி கடந்த 11-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் நாடாளு மன்றத்தின் எம்.பி.க்கள் எண் ணிக்கை 577 ஆகும். அவற்றுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெரும் பான்மையான இடங்களில் அதிபர் மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.

பிரான்சை பொறுத்தவரை எம்.பி., தேர்தலில் போட்டியி டுபவர்கள் 50 சதவீத வாக்கு களை பெற வேண்டும். இதற் காக 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத வாக்கு கிடைக்காவிடில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் நீக் கப்பட்டு முன்னணியில் இருப் பவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். அவர்களில் 80 சதவீதம் வாக்குகள் பெறுப வர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முதல் சுற்று தேர்தலை வைத்து எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். என கணிக்க முடியாது. எனவே இரண்டாவது சுற்று தேர்தல் நடந்தது. அதில் ஏற்கெனவே நடந்த தேர்தலில் அதிக வாக் குகள் பெற்றவர்கள் மட்டும் போட்டியிட்டனர்.

அதற்காக பிரான்ஸ் முழு வதும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் வரிசையில் நின்று ஆர் வமாக வாக்களித்தனர். வாக்குச் பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், அதிபர் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றியது. நாடாளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக் ரான் முன்வைத்த புதிய பொரு ளாதாரத் திட்டங்கள், பிரிட்ட னுடனான உறவு குறித்த கொள்கைகள் நாடாளுமன்றத் தில் பெரிய எதிர்ப்பின்றி நிறை வேறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner