எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜூன் 18 அமெரிக் காவுக்கும், கம்யூனிஸ்டு நாடான கியூபாவுக்கும் பனிப் போர் காலத்திலிருந்தே பகை நீடித்து வந்தது. கியூபா புரட்சிக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இடைவெளியைத் தொடர்ந்து, கடந்த 1961-ஆம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து, கியூபா வில் ஃபிடல் காஸ்ட்ரோ தலை மையிலான கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க தனது சிஅய்ஏ உளவுத் துறை மூலம் பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. மேலும், கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை களையும் விதித்தது. இந்த நிலை யில், சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த பகையை முடி வுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கியூபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அதன் பலனாக, பல ஆண்டுகள் கழித்து நல்லுறவை ஏற்படுத்த இரு நாடுகளும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டன. அதன் தொடர்ச்சி யாக, அமெரிக்கத் தூதரகம் கியூ பாவிலும், கியூபாவின் தூதரகம் அமெரிக்காவிலும் அமைக்கப் பட்டன. மேலும், கியூபாவில் வர லாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுப் பயணத்தை ஒபாமா மேற்கொண் டார்.
இதனைத் தொடர்ந்து அமெ ரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நல்லுறவு மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஒபாமா வைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், கியூ பாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகக் கூறினார்.

அந்த ஒப்பந்தம் கியூபாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாலும், அமெரிக்க நிதி கியூபாவின் ஏகபோக ஆட்சியாளர் ரவுல் காஸ்ட்ரோவின் கைகளில் சேர்வதைத் தடுப்பதற்காகவும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய் வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியா வான்வெளித் தாக்குதல்:
180 அய்.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு

மாஸ்கோ, ஜூன் 18 அய்.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் டெயிர் எஸ்ஸார் மாகாணத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் பகுதியை குறிவைத்து கடந்த ஜுன் 6 மற்றும் 8-ஆம் தேதி வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அய்.எஸ்.தீவிரவாதிகளின் தளபதிகளான அபு ஒமர் அல்-பெகிகி மற்றும் அபு யாசின் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், 180 அய்.எஸ். தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப் பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner