எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனிவா, ஜூன் 18 ஜெனீவாவில் பன்னாட்டு தொழிலாளர் மாநாட் டின் 106ஆவது அமர்வு  இம்மாதம் 5ஆம் நாள் முதல்  9 நாள்கள் நடைபெறு கின்றன. பணிபுரியும் பெண்களுக் கான வளமான எதிர்காலம் குறித்து மேலும் குழந்தை தொழி லாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்கு பன் னாட்டு தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்கள் ஒப்புக் கொள்ளப் பட்டன.  இம் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பண் டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டார்.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின்  தீர்மானங்களான 1973ஆம் ஆண்டின் தீர்மானம் (எண் 138) தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச வயது நிர்ணயம் மற்றும் 1999ஆம் ஆண்டு (எண்182)  மோசமான குழந்தைத் தொழிலாளர் முறை ஆகிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப் பதற்கு அடிப்படையான இரண்டு தீர்மானங்களை  ஏற்றுக் கொள் வதாக இந்தியா இம் மாநாட்டை யொட்டி ஒப்புக் கொண்டுள்ளது.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பில் மொத்தம் 187 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 170ஆம் உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. அவ்வமைப் பின் தீர்மானங்கள் 138, 181, 182 ஆகிய தீர்மானங்களை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தத்தாத்ரேயா கூறும் போது, “குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, 14 வயதுக்குட்பட்ட குழந்தை களை தொழிலாளர்களாக எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ள தாகவும், 14 வயது முதல் 18 வயது வரை தீங்கு விளைவிக்கின்ற எந்தவகையான தொழிலிலும் ஈடுபடுத்துவதில்லை என்றும்,  1.9.2016 முதல் குழந்தை தொழி லாளர் சட்ட திருத்தம் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளன.

2030 ஆம் ஆண்டின் குறிப் பிடத்தக்க வளர்ச்சியை இலக் காகக் கொண்டு குழந்தைத் தொழி லாளர் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளை அரசு செய்து வருகிறது’’ என்று குறிப்பிட்டார். சட்டத்திருத்தங்கள்மூலமாக விரிவாக குறிப்பிட்ட வேலை களில் குழந்தைகள் ஈடுபடுத்தப் படுவதை தவிர்க்கும் வகையில் தடைசெய்வதுடன் அத் தொழில் களில் ஈடுபடுத்தப்பட்ட குழந் தைத் தொழிலாளர்களை மீட்பது, மறுவாழ் வளிப்பதையும் அரசு செய்துவருவதாக குறிப்பிட்டார்.

குழந்தைத் தொழிலாளர் முறை  ஒழிப்பில் இந்தியாவின் ஒப்புதலை பன்னாட்டு தொழி லாளர் அமைப்பின் தலைவர் கய் ரைடர் அங்கீகரித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner