எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூன் 17 பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 தளங்களைக் கொண்ட அடுக் குமாடிக் குடியிருப்பில் பலியா னோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந் தது.

அந்தக் கட்டடத்தில் இன்னும் பல உடல்கள் மீட்கப்படாமல் உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100- அய்த் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து லண்டன் பெரு நகர காவல்துறை தலைவர் ஸ்டூவர்ட் கண்டி கூறியதாவது: புதன்கிழமை தீவிபத்துக்குள்ளான ‘கிரீன்ஃபெல் டவர்’ கட்டடத்தில் இருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், அந்தக் கட்டடத்துக்குள் மேலும் பல உடல்களை மீட்க வேண் டியுள்ளது.

எனவே, இந்த விபத்தில் பலி யானோர் எண்ணிக்கை மேலும் உயரும்.

சதிச் செயல் காரணமாக கிரீன் ஃபீல்டு டவரில் தீப்பிடித்ததாக சந்தேகிப்பதற்கு எந்த முகாந் திரமும் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணை முடிய பல வாரங்கள் பிடிக்கும்.

விபத்துக்குள்ளான கட்ட டத்தில் யாரும் உயிர் பிழைத்தி ருப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை.

தீவிபத்தில் உயிரிழந்தவர் களின் உடல்கள் மிக மோசமாக எரிந்து சாம்பலாகியுள்ளதால், அவர்கள் யாருடைய அடையாளத் தையும் கடைசி வரை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம் என்றார். இந்த விபத்து குறித்து குற்றவியல் விசாரணை நடை பெறும் என்றார் அவர். ஏற் கெனவே விடுக்கப்பட்ட பல் வேறு பாதுகாப்பு எச்சரிக்கையை கிரீன்ஃபீல்டு டவரை நிர்வகித்து வரும் கென்சிங்டன் செல்சா வாடகை நிர்வாக அமைப்பு (கேசிடிஎம்ஓ) அலட்சியப்படுத் தியதே இந்த மோசமான தீவிபத் துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து, நீதிபதி தலை மையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உள்ளூர் நிர்வாகத் துறையின் வீட்டு வசதி அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தர்.

இந்தப் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண் டனின் மேற்குப் பகுதியில், வடக்கு கென்சிங்டனில் பொதுத் துறைக்குச் சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது.

பெரும்பாலும் தொழிலா ளர்கள் வசிக்கும் இந்தப் பகுதி யில் அமைந்துள்ள கட்டடங்களில் ஒன்றான 24 அடுக்கு கீரீன்ஃபீல்டு டவரில் 2-ஆவது மாடியில் செவ் வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து, அந்தத் தீ மற்ற தளங் களுக்கும் வேகமாகப் பரவியது.மருத்துவக் கல்லூரி கால்பந்து போட்டி


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner