எழுத்துரு அளவு Larger Font Smaller Font




பெய்ஜிங், மே 19  ‘வான்னாகிரை’ இணைய வைரஸையடுத்து, புதிய வைரஸ் கணினிகளைத் தாக்கி வருவதாக சீன தேசிய இணைய பாதுகாப்புத் தொடர் பான அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சீன தேசிய கணினி வைரஸ் அவசர உதவி மய்யம் (சி.வி.இ.ஆர்.சி.) வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

‘யு.அய்.டபிள்யு.அய்.எக்ஸ்’ என்னும் புதிய கணினி வைரஸ் பரவுவது தெரிய வந்துள்ளது. விண்டோஸ் மென்பொருளில் உள்ள குறைபாட்டைப் பயன் படுத்தி கணினிகளிலும் சேமிப் பகங்களிலும் ஊடுருவும் இந்த வைரஸ் அவற்றை முடக்கும் வல்லமை கொண்டது.

முந்தைய வான்னாகிரை என்கிற ரேன்சம்வேர் வகையைச் சேர்ந்த பிணைப் பணம் பறிக்கும் வைரஸ் போலவே ‘யு.அய்.டபிள்யு.அய்.எக்ஸ்’ வைரஸும் செயல்படுகிறது. ஒரு கணினி மூலம் நுழைந்துவிட்டால் கணினி சேமிப்பகத்தையும் முடக்கும் அபாயம் உள்ளது.

மேம்படுத்தாத விண்டோஸ் மென்பொருளைப் பயன் படுத்துவோர் உடனடியாக, மேம் படுத்திய புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கவும் என்று சீன தேசிய கணினி வைரஸ் அவசர உதவி மய்யம் எச்சரித்துள்ளது.

‘யு.அய்.டபிள்யு.அய்.எக்ஸ்’ வைரஸ் தொடர்பாக டென் மார்க்கை சேர்ந்த இணைய பாதுகாப்பு சேவை நிறுவனமான ஹைம்டால் கடந்த வாரமே எச்சரிக்கை வெளியிட்டதாகத் தற்போது தெரிய வந்துள்ளது. ‘யு.அய்.டபிள்யு.அய்.எக்ஸ்’ வைரஸானது வான்னாகிரை வைரஸைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

வைரஸ் என்பதும் ஒரு மென்பொருள் என்கிற நிலையில், அதன் செயல்பாட்டைத் தடுக்க அந்த மென்பொருளிலேயே ஒரு தடுப்புக் குறியீட்டு மென்பொருள் இருப்பது வழக்கம். ஆனால் ‘யு.அய்.டபிள்யு.அய்.எக்ஸ்’ வைரஸில் அது போன்ற தடுப்பு மென்பொருள் இல்லை என்று ஹைம்டால் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சீன அரசு அமைப்பான சி.வி.இ.ஆர்.சி. எச்சரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தாத விண்டோஸ் மென்பொருள் மூலம் வான்னா கிரை பரவியதாகக் கூறப்பட்டது. வான்னாகிரை ரேன்சம்வேர் வைரஸ் உலகம் முழுவதும் 150 நாடுகளில் கணினிகளை முடக்கியது. வான்னாகிரை ரேன்சம் வேர் வைரஸ் சீனாவில் சுமார் 30,000 கணினிகளைத் தாக்கியதாக கணினி மென்பொருள் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்தது.

முக்கியப் பல்கலைக்கழகங் கள், ஏடிஎம்கள், சீன அரசு நிறு வனமான பெட்ரோசைனாவின் விநியோக மய்யங்கள் பாதிக்கப் பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் சீனா அதனை மறுத்தது.

சீனாவில் பெரும்பாலும் திருட்டு மென்பொருள் பயன் படுத்தப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டு உண்டு.

இந்த நிலையில், புதிய வைரஸ் குறித்து சீன அரசு அமைப்பே தீவிர எச்சரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner