எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மான்ட்ரீல், மே 18 விமானம் மூலம் உலகை தனியாக சுற்றி சாதனை படைக்கும் ஆப்கன் பெண் விமானி, தனது பய ணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் முடிக்கிறார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் விமானி ஷயஸ்தா வயஷ் (29). இவர் உலகம் முழுவதும் விமானத்தில் தனியாக சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் 25,800 கி.மீ. பறந்து சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். தனியாக தனது பயணத்தை அமெரிக்கா வின் புளோரிடாவில் உள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்தில் இருந்து கடந்த 13-ஆம் தேதி தொடங்கினார்.

அங்கிருந்து ஸ்பெயின், எகிப்து, இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இவர் தனது பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் முடிக்கிறார்.

இதன் மூலம் உலக நாடுகளை விமானத்தில் தனியாக சுற்றிய இளம் பெண் என்ற பெருமையை பெறுகிறார். இவர் சோவியத் போர் நடைபெற்ற காலத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்தார்.

1987-ஆம் ஆண்டில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது.  அங்கு விமானம் ஓட்ட பயிற்சி பெற்றார். பின்னர் விமானி ஆனார். ஆப்கானிஸ் தானின் பயணிகள் விமானத்தின் மிக இளமையான பெண் விமானி ஆனார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner