எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஏப். 21- வட அமெ ரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக் கிறது. இதுவும் அமெரிக்கா வுக்கு சொந்தமானது.

இதையொட்டிதான் ரஷ்யா வின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.

இவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தன. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும்.

ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்த தும் அமெரிக்கா 2 போர் விமா னங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமா னங்கள் ரஷ்ய போர் விமானங் களை இடைமறித்தன.

இதனால் ரஷ்ய விமானங் கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட் டன.

இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிட வில்லை.


New layer...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner