எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கராக்கஸ், ஏப். 21- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பண வீக்கம் வரலாறு காணாத அளவுக்கு 700 சதவீதத்தை எட்டக் கூடும் என்று சர்வதேச நிதியம் அய்.எம்.எப். கூறி உள்ளது.

இந்த நிலையில், அதிபர் நிக் கோலஸ் மதுரோவுக்கு எதிராக மக் கள் போர்க்கொடி உயர்த்தி உள்ள னர். அங்கு அதிபர் தேர்தல் நடத்த வேண்டும்; சிறையில் அடைக்கப் பட்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதி களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரு கின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள் நடத்தி வரு கின்றனர். பேரணிகளும் நடத்தப் படுகின்றன. இந்த போராட்டங்க ளின்போது தலைநகர் கராக்கசில் ஒரு இளைஞரும், கொலம்பியா எல்லையில் உள்ள சான் கிறிஸ் டோபலில் ஒரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் கராக்கசுக்கு தெற்கே தேசிய பாதுகாவலர் ஒருவர் கொல் லப்பட்டார்.

ஆனால் காவல்துறையினரை எதிர்க்கட்சியினர் தாக்குவதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். கடைகள் கொள் ளையடிக்கப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார். இந்த சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner