எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மொசூல், மார்ச் 18  மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை ஈராக் ராணுவம் கைப் பற்றியுள்ளது. தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலை கைப்பற்ற ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்கான பலனும் கிடைத்து வருகிறது. தற்போது மேற்கு மொசூல் நகரின் பெரும்பகுதியை ஈராக் ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இதில் நேற்று தீவிரவாதி களுடன் நடைபெற்ற கடுமை யான தாக்குதலில் மொசூலின் மேற்கு பகுதியில் உள்ள பழைய நகரத்தின் மைதானம் ஒன்றை ஈராக் ராணுவம் கைப்பற்றி உள் ளது.
ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான மொசூல் நகரின் மேற்கு பகுதியை கைப்பற்ற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் ஈராக் ராணுவம் போராடி வருகிறது. அதன் பயனாக மேற்கு பகுதியில் உள்ள பல இடங்களை ராணும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அமெரிக்க ராணுவத்தின் வான்வெளி உதவியுடன், ஈராக் ராணுவம் தரைப்படையில் தாக் குதல் நடத்தி வருகிறது. அய்.எஸ். தீவிரவாதிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி வருவ தால், மக்களுக்கு பாதிப்பு ஏற் படாதவாறு தீவிரவாதிகளை ஒழிக்க, பீரங்கி உள்ளிட்ட ஆயுதமேந்திய பெரிய வாக னங்கள் பின்வாங்கி உள்ளன. அதற்கு பதிலாக சிறிய ரக டிரான்கள் செயல்பாட்டுக்கு வந் துள்ளதாக ஈராக் மத்திய காவல்துறை அதிகாரி லெட்டி னன்ட் ஜெனரல் ரயீத் ஷாகீர் ஜவ்தாவ் தெரிவித்துள்ளார்.
அதன் பயனாக மேற்கு மொசூலின் பழைய நகரத்தில் உள்ள அல்-பாஷா மசூதி, பாப் அல்-சாராய் மார்க்கெட் உள்ளிட்ட இடங்கள் ஈராக் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த தாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner