எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லிமா, மார்ச் 18 பெரு நாட்டில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல் நினோ விளைவு காரணமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் பலியாகி உள்ளனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்த ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பலர் வீடுகளின் மேற்கூரையின் மீது உதவிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு நகரங்கள் நீரில் மிதக்கின்றன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கால்நடைகள் அடித்துச்செல்லப்பட்டன. 12,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 1,15,000 வீடுகள், 117 பாலங்கள் மற்றும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒரு தீவிர காலநிலை பிரச்சனையை நாம் எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ பப்ளோ குசான்ஸ்கி தெரிவித்தார். 1998-க்கு பிறகு பெரு சந்திக்கும் மற்றொரு பெரிய நிகழ்வு இது என்றார்.

ராணுவத்தின் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குசான்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த வாரம் வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட பருவநிலை மாற்றம் (எல் நினோ விளைவு) காரணமாக பலத்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner