எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், மார்ச் 17 அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அமைச்சர வையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொ னால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவை சேர்ந்த நிக்கி ஹாலே டிரம்ப் அவையில் அய்.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் நியமிக்கப்பட் டுள்ளார். அமெரிக்க சுகாதாரத் துறையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க சுகாதார அமைப்பு 130 மில்லியன் அமெரிக்கர்களுக்கான காப்பீடுகளை பராமரித்து வரு கிறது. அதன் தலைமை பொறுப் பிற்கு சீமா பொறுப்பேற்று உள்ளார். அமெரிக்க சுகாதாரத் துறைக்கு ஒரு சிறந்த தலைவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது துணை அதிபர் மைக் பினேஸ் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க செனட் இதனை உறுதி செய்தது. சீமாவை தேர்வு செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 55-43 என கணக்கில் சீமா தேர்வு செய்யப் பட்டுள்ளார். எனவே டிரம்ப் தலைமையிலான அமைச்சரவை யில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் தலைமைப் பொறுப் பை சீமா ஏற்றுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
-- >