எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மணிலா, ஜன.11 பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுக்கடலில் படகில் சென்று கொண்டிருந்தவர்களில் 8 பேரைக் கொன்று கொள்ளை யர்கள் அட்டூழியத்தில் ஈடுபட் டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள கடல் பகுதியில் 15 மீனவர்கள் கொண்ட குழு வினர் நேற்றிரவு லாவுட் சிரோ மோன் தீவு அருகே தங்களது படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி வழி யாக ஒரு படகில் வந்த கொள் ளையர்கள், மீனவர்களின் படகை குறி வைத்து இயந்திரத் துப் பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறி யாது திகைத்தனர்.

சில மீன வர்கள் படகிலிருந்து கடலில் குதித்து அருகிலுள்ள தீவை நோக்கி நீந்திச் செல்ல ஆரம்பித்தனர்.

கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குத லால் படகிலிருந்த 8 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் கடலோரக் காவல் படை படகுககள் சம்பவ விரைந்து சென்றதாகவும், கொள்ளையர் களை தேடி வருவதாகவும் அப்பகுதி கடலோரக் காவல் படை செய்தி தொடர்பாளர் அர் மந் பாலிலோ தெரிவித்துள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner