எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கானா, ஜன. 10- மேற்கு ஆப்பி ரிக்க நாடான கானாவில் புதிய அதிபராக அகுஃபோ அட்டோ சனிக்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்ச ராகவும் அட்டர்னி ஜெனரலாக வும் அகுஃபோ அட்டோ (72) பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த இரு அதிபர் தேர் தல்களில் அவர் போட்டியிட்ட போதிலும், தற்போதுதான் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

தலைநகர் அக்ராவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிபர் பத வியேற்றார். அவருடன் துணை அதிபராக மகமூது பாவு மியா பதவியேற்றார். இருவரும் பாரம் பரிய உடையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரிட்டன் காலனி நாடாக இருந்த கானா 1957-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. ஜனநாயக முறை அரசுகள் ஆட்சி புரிந்து வந்தபோதிலும், அந்நாட்டில் 1966-இல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட் டது. நீண்ட கால ராணுவ ஆட் சிக்குப் பிறகு, 1992-இல் கானா மீண்டும் ஜனநாயக முறை அரசியலுக்குத் திரும்பியது. அப்போதிலிருந்து தேர்தல்க ளும் ஆட்சி மாற்றங்களும் அமைதியான முறையில் நடை பெற்ற வருகின்றன.

இலவச பள்ளிக் கல்வி, புதிய ஆலைகள் அமைக்கும் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகிய வாக்குறுதி களை அளித்து, அகுஃபோ அட்டோ தேர்தலில் வெற்றி பெற்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner