எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன. 9- தலீபான்க ளின் கொட்டத்தை அடக்குவ தற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மய்யம், பென்ட கன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி, பின்லேடனின் அல் கொய்தா இயக்க பயங்கரவாதி கள் விமானங்களை மோதி தாக் குதல் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தனர்.

இந்த அல்கொய்தா பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கிருந்த தலீபான்களை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு தங்கி இருந்து, தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் உள் நாட்டுப் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வந்தன.

ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங் குள்ள அமெரிக்க படைகளை கொஞ்சம், கொஞ்சமாக விலக் கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. தற்போது ஆப் கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், காபூல், பாக்ராம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் அய்.எஸ். இயக்கத் தினரை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தென் மேற்கு மாகாணமான ஹெல் மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் 2014-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட் டன.

அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன் றத்தொடங்கினர். சமீப கால மாக அந்த மாகாணத்தில் தலீ பான்கள் கடுமையான தாக்கு தல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதிகளை வளைத் துக்கொண்ட அவர்கள், மாகாண தலைநகர் லஷ்கர் காரை நெருங்கி முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தையும், கொட் டத்தையும் அடக்க முடியாமல் உள்நாட்டுப் படைகள் திணறி வருகின்றன.

இந்த நிலையில் ஹெல் மாண்ட் மாகாணத்தில், நேட்டோ படைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டது.

இதற்கிணங்க அமெரிக்கா, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவது என முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் மத்திய கட் டளை பிரிவு தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் வில்லியம் பேட்லர் கூறுகையில், ஆப் கானிஸ்தான் இன்னும் பயங் கரவாதத்தின் பிடியில்தான் உள்ளது. எங்களது நோக்கம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குவதுதான். ஆப்கானிஸ் தான் அதைக்கொண்டு தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எங்களது பணியில் பல ஆபத்துகள் உள்ளன என குறிப்பிட்டார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner