எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைஜிரியா, டிச. 9- நைஜிரியா நாட்டில் உள்ள போகோஹா ராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டு களாக போராடி வருகிறது. இதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அவ் வவ்போது நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே நடு நடுங்க செய்தது.

கடத்தலுக்கு பிறகு மூன்று ஆண்டுகளில் 21 மாணவிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கற்பமாக இருந்தனர். கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடு களின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத் தப்பட்ட பள்ளி மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவ லம் நீடித்து வருகிறது.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள மீதமுள்ள 195 பள்ளி மாணவிகள்  விரைவில் மீட் போம் என்று நைஜிரியா அதி பர் முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner