எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன.8 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொ னால்டு டிரம்ப் வெற்றி பெற உதவும் வகையில் பிரசாரம் செய்யுமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக் குநர், விரைவில் பதவிக்காலம் முடிவடைய உள்ள அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்துள்ள 31 பக்க அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கடந்த ஆண்டில் (2016) நடை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்த லில் வாக்காளர்கள் மீது தாக்கத் தை ஏற்படுத்தும் வகை யில் ஒரு பிரச்சாரத்தை நடத்துமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதாக நாங்கள் கணிக்கிறோம். அமெ ரிக்க ஜனநாயக நடைமுறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை யைச் சீர்குலைப்பது, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்துவது, அவரது வெற்றி வாய்ப்புகளைச் சிதைப்பது ஆகியவையே ரஷ் யாவின் இலக்குகளாகும். மேலும் அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும் என்று புதி னும், ரஷ்ய அரசுத் தரப்பினரும் விரும்பினர் என்றும் கணித்துள் ளோம். இந்தக் கணிப்புகள் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் உளவு அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இத னிடையே, இந்த அறிக் கையின் விவரங்கள் குறித்து, புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராகப் பதவியேற்க உள்ள மைக் பென்ஸ் ஆகி யோரிடம் உளவு அதிகாரிகள் குழு எடுத்துக் கூறியுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தாம் வெளியிட்ட அறிக்கையில் உளவுத் துறையின் கணிப்பை டிரம்ப் மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:

ரஷ்யா, சீனா, மற்ற நாடுகள், வெளி அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என பல்வேறு தரப்பி னரும் நமது அரசு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஜன நாயகக் கட்சியின் தேசியக் குழு உள்ளிட்ட அமைப்புகள் ஆகிய வற்றின் இணையவெளிக் கட்ட மைப்பைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், அவர்களால் அதி பர் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடிய வில்லை. குறிப்பாக, வாக்கு இயந்திரங்களிலும் எந்த முறை கேடுகளும் நடைபெறவில்லை. எங்கள் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் இணைய தளத்தை சீர்குலைக்கவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த இணையதளத்தில் கடுமையான பாதுகாப்புக் கட்ட மைப்புகள் இருப்பதால் ஊடுருவ முனைந்தவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவை இணையவெளிப் பாதுகாப்பு மிகுந்ததாக மாற்றுவதற்கான திட் டம் ஒன்றை வகுத்து, நான் பதவியேற்று 90 நாள்களுக்குள் என்னிடம் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க உள் ளேன். இன்னும் இரண்டு வாரங்களில் நான் பதவியேற் கிறேன். அமெரிக்கர்களின் பாது காப்பே எனது முதல் முன்னுரிமை என்று அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner