எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒவ்வொரு குடிமகனும்  உறுப்புக் கொடையாளியாக மாற்றும் புதிய சட்டம்: பிரான்சில் அமல்

பாரிஸ், ஜன.7 நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் உறுப்பு கொடை செய்யக்கூடிய கொடையாளியாக மாற்றும் புதிய சட்டம் பிரான்சில் அமலுக்கு வந்துள்ளது. விருப்பம் இல்லை என்று பதிவு செய்தால் மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும்.

மனிதர்கள் இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று, நோயுற்று உறுப்புகள் பாதிக்கப்பட்டவர் களுக்கு பொருத்தும் மருத்துவ சிகிச்சை தற்போது பிரபலமாகி உள்ளது. இந்தியாவைப் பொருத்த வரை இருக்கும்வரை ரத்த தானம் இறந்தபின் உறுப்புதானம் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற் பட்டிருக்கிறது.

பொதுவாக சம்பந்தப்பட்ட நபர் அல்லது குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே உறுப்பு தானம் சாத்தியமாகிறது. ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் உறுப்பு கொடை செய்பவராக மாற்றியிருக்கிறது பிரான்ஸ் அரசு.

ஸ்பெயின், ஆஸ்திரியா போன்ற அய்ரோப்பிய நாடு களைப் போன்று பிரான்சிலும் உடல் உறுப்பு கொடை செய்யும் விதிமுறைகளில் மாற்றம் செய் யப்பட்டு, புதிய சட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புகளை கொடை செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும். அதே சமயம், உறுப்புக்களை கொடை யளிக்க விருப்பம் இல்லை என்று விலகாத வரையில், குடி மக்கள் அனைவருமே உறுப்பு கொடை செய்பவராகவே கருதப் பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும்.

உறுப்புகளை கொடையளிக்க விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் (மறுப்பு பதிவேடு அல்லது தேசிய நிராகரித்தல் பதிவேடு) தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களின் உறுப்புக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

எனவே, ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவரது உடல் உறுப்புகளை நீக்குவது பற்றி முடிவெடுப்பதற்கு முன் பாக, மறுப்பு பதிவேட்டில் அவரது பெயர் இருக்கிறதா? என்று மருத்துவ குழுவினர் சரிபார்ப்பார்கள். இந்த பதிவேட் டில் 1.5 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner