எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காற்று மாசுபாட்டால்
நிறம் மாறும் புல்லட் ரயில்கள்

பீஜிங், ஜன.6 சீனாவில் நிலவி வரும் கடும் காற்று மாசுபாட் டால் அங்குள்ள புல்லட் ரயில் கள் நிறம் மாறி காட்சியளிக் கின்றன.

சீனாவின் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்தது. இத னால் அந்நாட்டு அரசால் இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள்  தற்காலிகமாக மூடப்பட்டன.

தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித் துள்ளது.பீஜிங் உள்ளிட்ட 72 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மய்யம் மக்களுக்கு எச்ச ரிக்கை விடுத்தது. காற்றுமாசுடன் கூடிய பனிப்புகை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இந்த காற்று மாசுபாடு அங்கு இயக்கப்படும் ரயில் களையும் விட்டு வைக்க வில்லை. முழுவதும் வெள்ளை நிறத்தில் இயக்கப் பட்டு வந்த புல்லட் ரயில்கள், காற்று மாசு பாட்டின் காரணமாக தற்போது பழுப்பு நிறத்தில்  மாறியுள்ளன.

அந்தக் காட்சியை அங் குள்ளவர்கள் நிழற்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சீனாவில், சுத்த மான காற்று விலைக்கு விற்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner