Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜம்மு, ஆக.21-காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள பன்னாட்டு எல்லையில் இந்தியா பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் பலியானார்.

இந்தியா  பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதையும் மீறி பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அடிக்கடி நடக் கிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத் தின் அக்னூர் பகுதியை ஒட்டியுள்ள மலபேலா, கர்கால், சித்ரா முகாம் மற்றும் நகா நம்பர் 10 ஆகிய இடங் களில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்போது இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடு ருவ முயன்றதை பார்த்து, எல்லை பாதுகாப்பு படையினர் பதில் தாக் குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி பலியானார். மற்றவர்கள் பாகிஸ் தானுக்குள் சென்று விட்டனர். இந்த சண்டை நேற்று காலை 7.30 மணி வரை நீடித்தது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப் பாட்டு கோடு பகுதியிலும் பாகிஸ் தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ் தான் படையினர், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை 14 முறை மீறியுள்ளனர். ஆர்.எஸ். புரா பகுதியில் கடந்த 17ஆம் தேதி பாக். படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பா பகுதியில் கடந்த 15ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அர்னியா பகுதியில் கடந்த 13ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே பகுதியில் கடந்த 11ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லை பாது காப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.























.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh