எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.13 கடந்த சில வருடங்களாகவே பொறியியல் மீதான மோகம் குறைந்து கலை அறிவியல் துறைகளில் மாணவர் களின் சேர்க்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு, 2018 ஆம் ஆண்டி லும் கலை அறிவியல் கல்லூரி களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது.

கூடுதலாக 20 சதவிகித இடங் களில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரி களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது.

கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்கள் ஆர்வமும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், இதற்கான நிரந்தரத் தீர்வாகத் தேவைப்படும் துறைகளில் கூடுதல் வகுப்புத் துறைகளைத் தொடங்க அனு மதிக்க வேண்டும் எனக் கோரிக் கைகள் எழுந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம், கலை-அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் 4 வகுப்புப் பிரிவுகளைத் தொடங் கிக் கொள்ள அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது. இதுவரை ஒவ்வொரு படிப்பிலும் அதிக பட்சமாக 3 வகுப்புப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு மட்டுமே அனு மதிக்கப்பட்டு வந்தது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு பிரிவைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது எனப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கோடை விடுமுறையில்

என்ன செய்யவேண்டும்?

மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை

சென்னை, ஏப்.13  கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

கோடை விடுமுறை நாள்களில் மாணவர்கள் தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும் என்றும், அரசு பொது நூலகத் திற்கு சென்று புத்தகங்களை படித்து குறிப்பு எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை தமது அறிவுரையில் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் துணையின்றி வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாது என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காலை மாலை வேளையில் விளையாட்டில் ஈடுபட வேண்டும். செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக கோடை விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும், தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும் உட்பட பல அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இருப்பினும், பள்ளி வேலை நாள்கள் வரும் சனிக்கிழமை (ஏப்.13) தேதி வரை நடைபெறும். இந்த நாள்களில் கோடை விடுமுறை தொடர்பான அறிவுரைகளை மாணவர் களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏ-சாட் ஏவுகணை சோதனை  விண்வெளியில் ஏற்பட்ட துகள்கள்

விரைவில் அழிந்துவிடும்: டிஆர்டிஓ தலைவர்

சென்னை, ஏப்.13  செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணை சோதனையால் விண்வெளியில் ஏற்பட்ட துகள்கள் விரைவில் அழிந்துவிடும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

டில்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஏ-சாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட செயற்கைக் கோளின் துகள்கள் இன்னும் சில வாரங்களில் அழிந்துவிடும். “மிஷன் சக்தி’ திட்டம் அவ்வாறே திட்டமிடப்பட்டது. பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அந்த மையத்திலிருந்து வெகு தொலைவில்தான் இந்தியா ஏ-சாட் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. 50க்கும் மேற்பட்ட துறைகள் இந்தச் சோதனை வெற்றி பெற முக்கியப் பங்கு வகித்தது என்று சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி, இந்தியாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒன்றை ஏ-சாட் ஏவுகணையை செலுத்தி அழிக்கப்பட்டது. இதற்கு “மிஷன் சக்தி’ என்று பெயர் சூட்டப் பட்டது.

இதன்மூலம், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.

இந்த சோதனையால் அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துகள்கள் விண்வெளியில் மிதப்பதாகவும், அதனால் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நாசா அமைப்பு எச்சரித்தது.

இந்தியாவின் சோதனையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் புவிதாழ்வட்ட பாதையிலே இந்தச் சோதனை நிகழ்த்தப் பட்டது என்றும் சதீஷ் ரெட்டி ஏற்கெனவே விளக்கம் அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner