எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு அறிவிப்பு

சென்னை, பிப்.22  சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங் கரவாத அமைப்பு, சமீபத்தில் புல்வாமாவில் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 விசேட அதிரடிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவரும் பதிலடி நடவடிக் கைகளில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது.

முன்னதாக, நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்து ரத்து, பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு 200 சதவீத கலால் வரி என அந்நாட்டுக்கு நெருக்கடி தரும் இரு நடவடிக்கைகளை ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உபரி நதிநீர் பகிர்வை நிறுத்தும் முடிவு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது சுட்டுரைப் பதிவில் வியாழக்கிழமை கூறியிருந்ததாவது:

நதிநீர் பங்கீட்டில், இந்தியாவின் பயன்பாடு போக, இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கிலிருந்து பாயும் நதிகளில் இருந்து இந்தியாவுக்கான பங்கில் எஞ்சியிருக்கும் உபரிநீர், இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு மடைமாற்றப்படும்.

ராவி நதியில் சாபூர்கண்டி அணை கட்டும் பணிகள் தொடங்கி விட்டன. நமக்கான நதிநீர் பங்கானது, உஜ் நதியில் கட்டப்படும் அணையில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தப்படும். எஞ்சிய நதிநீரானது, 2-ஆவது ராவி-பியாஸ் இணைப்பின் மூலமாக இதர மாநிலங்களுக்கு பாயுமாறு செய்யப்படும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

6 ஆண்டுகள் ஆகும்: பாகிஸ்தானுக்கான உபரிநீரை நிறுத்தும் முடிவு 2 மாதங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள அரசு அதிகாரிகள், அதைச் செயல்படுத்த இன்னும் 6 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறினர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில், ராவி நதி பாயும் வழித்தடத்தில் சாபூர்கண்டி அணையை கட்டும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. தற்போது அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த அணையின் உயரம் 100 மீட்டரை எட்டும்போதுதான் பாகிஸ் தானுக்கான உபரிநீர் பாய்வதை தடுக்க இயலும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner