எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை நோக்கி விவசாயிகள் போராட்டப் பயணம் 50ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கிறார்கள்

மும்பை, பிப். 21- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் இந்துத்துவவாதி களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே நான்காம் ஆண்டு நினைவு நாளில் (பிப்ரவரி 20) விவசாயிகளின் போராட்ட பயணம் நாசிக் கிலிருந்து தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராடிவந்துள்ளனர்.

தற்பொழுது அம்மாநிலத்தில்  விவசாயிகள் ஒன்றி ணைந்து மும்பை நகரை நோக்கி போராட்டப்பயணத்தை நடத்துவதாக அறிவித்து நேற்று (பிப்.20) நாசிக்கிலி ருந்து தொடங்கப்பட்டுள்ள  அப்பயணத் தில் 23 மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் இணைந்துகொள்கின்றனர்.

விவசாயிகளுக்குத் துரோகம்!

பாஜக அரசு விவசாயிகளுக்கு இழைத்துள்ள துரோகம் எனும் தலைப்பில் கடந்த ஓராண்டாக விவ சாயிகள் மராட்டிய மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக நாசிக் கிலிருந்து மும்பை நோக்கி பயணம் மேற்கொண்டு, பாஜக அரசின் துரோகங் கள்குறித்து மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டப் பய ணம் 27.2.2019 அன்று விடு தலைப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் 88ஆம் நினைவு நாளில் மும்பையில் நிறைவடைகிறது.

விவசாயிகள் போராட்டப் பயண ஏற்பாட்டினை இந்திய கம் யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பாகிய அனைத் திந்திய கிசான் சபா ஏற்பாடு செய் துள்ளது.

ஒன்பது நாள்கள் பயணத்தைத் தொடர்ந்து 2.3.2019 அன்று மும் பையில் விவசாயிகள் பங்கேற்கின்ற மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் விவ சாயிகளின் போராட்டத்தின்போது வலியு றுத்தப்பட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதி வழங்கிய மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அதை நிறை வேற்றவில்லை. மராட்டிய மாநிலத் தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் நீர்ப்பாசன பிரச்சி னைகள், நில உரிமைகள், விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினை களில் உரிய தீர்வு காணப்படவில்லை.

பா.ஜ.க. அரசின் உறுதிமொழி எங்கே?

அனைத்திந்திய கிசான் சபா அமைப்பைச் சேர்ந்தவரான அஜீத் நவாலே கூறியதாவது:

மாநில அரசு அளித்த உறுதி மொழி களை ஓராண்டு ஆகியும் நிறைவேற்ற வில்லை. அதனாலேயே பாஜக தலை மையிலான மாநில அரசு மற்றும் மத் திய அரசு விவசாயி களுக்கு இழைத்த துரோகம் எனும் தலைப்பில் நீண்ட பேரணியை நடத்துகிறோம் என்றார்.

அனைத்திந்திய கிசான் சபா செய்தித் தொடர்பாளர் பி.எஸ்.பிரசாத் கூறிய தாவது:

அமைதியான வழிமுறையில் நடை பெறுகின்ற மார்ச் 2 விவசாயிகளின் மாபெரும் பேரணியை ஒடுக்குவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. பேரணிக்கு வருகை தருகின்ற அமைப் பினரை காவல் துறையினர் எவ்வித காரணமும் இல்லாமல், தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் காக்க வைக்கிறார்கள். எங்கள் அமைப்பினர்மீது வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன என்றார்.

காவல்துறை கூடுதல் கண்கா ணிப் பாளர் சஞ்சய் பாடீல் கூறியதா வது:

அவர்களின் பெயர் மற்றும் முகவரி களை வழக்கமாக பெறுவ தைத்தான் நாங்கள் செய்துள்ளோம் என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் நாசிக்கி லிருந்து மும்பை நோக்கிய பேரணியில் 35ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட னர். அதன்பிறகே விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.  ஆனால், அவற்றுள் ஒன்றையும் நிறை வேற்ற வில்லை என்று அனைத்திந்திய கிசான் சபா விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner