எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, பிப்.21 திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்அய்.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை அரசு மருத்துவமனை டீன் அசோகன் மறுத்துள்ளார்.

சிறுமிக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், அப்போது தவறு நடந்திருக்கலாம் என அவர் கூறினார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து

1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு மருத்துவமனைக்கு நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நிலைய அதிகாரிகள், நர்சுகள் உள்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படை அட்டூழியம்:

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

சென்னை, பிப்.21  கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தனர்.

மேலும் அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner