எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

புதுடில்லி,  பிப்.10 இந்தியாவில் மட்டும் ஏன் ஜாதி என்ற வினாவை எழுப்பினார் மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இளைஞர் காங்கிரசு சார்பில் இரு நாள் மாநாடு டில்லி ஜவாகர் பவனில் 9.2.2019 தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்து ப. சிதம்பரம் பேசியதாவது: நாடாளுமன்றம் நாட்டின் உச்சபட்ச முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும். நாடாளுமன்றத் தில் உள்ள மக்களவை, மாநிலங் களவை ஆகிய இரண்டுக்கும் மக்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் அனை வரும் நம்மை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஆனால், சில நேரங்களில் நாடாளுமன்றத்தில் நடப்பதைப் பார்க்கும் போது, ஏமாற்றம்தான் ஏற்படுகிறது.

பல நாள்களில் எந்தவித அலுவலும் நடைபெறுவதில்லை. பல மசோதாக்கள் எவ்வித விவாதமு மின்றி நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு உதாரணமாக அண் மையில் நிறைவேற்றப்பட்ட அரசலமைப்பு சட்ட திருத்தத்தைக் கூறலாம்.

இதுபோன்ற முறை அரசியலமைப்புச் சட்ட உரு வாக்கத்துக்கு எதிரானது. நமது முன்னோர்கள் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அண் மையில் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதா 3 நாள்களிலேயே நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்தியா பன்முகப் பண்பாடுடைய சமூகத்தைக் கொண்டதாக உள்ளது. இது போன்று மாறுவதற்கு ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, அய் ரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

உலகமய யுகத்தில், போட்டி நிறைந்த யுகத்தில் கோட்டையாக மாறி, கதவுகளை அடைத்தோம் என்றால், முன் னேற்றம் காண முடியாது. இந்தியாவுக்குள் கிறிஸ்தவம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், இஸ்லாம் 700 ஆண்டு களுக்கு முன்னும் வந்தன. சீக்கியம், சமணம், பௌத்தம் போன்றவை இந்த மண்ணில் தோன்றிய மதங்களாகும். இதன் காரணமாகத்தான் இந்தியா பன்முகப் பண்பாடு சார்ந்த நாடாக உள்ளது. பன்மொழிகள், பன்மதங்கள், பன்பழக்கங்கள், பன் உணவு முறைகள், பன்உடை முறைகள் ஆகியவை நம்மை பன்முகப் பண்பாடு நிறைந்த நாடாக பெருமைக் கொள்ளச் செய் கின்றன.

அதே சமயம் ஜாதியம் பெரும் தடைக் கல்லாக இருந்து வருகிறது. இது குறித்து நாம் அனை வரும் கேள்வி எழுப்ப வேண் டும். இந்தியாவில் மட்டும் ஏன் ஜாதிய வேறுபாடுகள் உள்ளன? ஜாதிய முறை, அநீதிகளை இழைத்து வருகிறது. இது இன் னும் தொடரத்தான் செய்கிறது. மேலும், தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டம் குறித்து காங்கிரசு கட்சி கடந்த சில நாள் களாகப் பேசி வருகிறது. எனவே, இளைஞர்கள் இங்குள்ள சமூகக் கட்டமைப்பை தெரிந்து கொண்டு, அரசியல், சமூக மாற் றத்துக்கு பாடுபட முன்வர வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner