எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, பிப்.10 இந்தியாவில் குழந்தை திருமண நிகழ்வுகள் வெகுவாக குறைந்து உள்ளன என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குழந்தைகளின் திருமணம் மிகவும் அதிகமாக உள்ளது, சராசரியாக 14  சதவீதம் கிராமப்புறங்களிலும் ,6.9 சதவீதம் நகர்ப்புறத்திலும் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது. சிறுவர் திருமணத்தின் மிக அதிகமான பாதிப்பு, பழங்குடி பெண்கள் மத்தியில் 15 சதவீதமும் மற்றும் பிற் படுத்தப்பட்டோர்  மத்தியில் 13 சதவீதமும் நடை பெறுகிறது. குழந்தைகள் திருமணம் செல்வந்தர் குடும்பத்தை விட வருமானம் குறைவாக உள்ள குடும்பத்திலேயே அதிகம் நடைபெறுகிறது. மேலும் அதுபோல் கல்வியறிவு குறைவாக உள்ள  குடும்பத்திலும் குழந்தைகள் திருமணம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் குழந்தை திருமணம் குறித்து தேசிய குடும்ப சுகாதார சர்வே3, கடந்த 2005 - -2006-ஆம் ஆண்டில் ஆய்வு நடத்தப்பட்டபோது, பீகார் மாநிலம் குழந்தை திருமணங்களில் 47.8 சதவீதம் வகித்து முதலிடத்திலும், 44.7  சதவீதம் வகித்து ஜார்கண்ட் மாநிலம் 2-ஆவது இடத்தில் இருந்தது. 40.4 சதவீதம் வகித்து 3-ஆவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலம், 4-ஆவது இடத்தில் மேற்கு வங்காளம் இருந்தது என தெரிவித்தது.

ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, பீகார்,  ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 20- சதவீதக்கும் அதிகமாக குழந்தைகள் திருமணம் குறைக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே காலகட்டத்தில்,  மேற்கு வங்காளத்தில் மட்டும் 8.4 சதவீதம் தான் குறைந்து உள்ளது.மாவட்ட அளவு ஆய்வில் மேற்குவங்காளத்தில் முர்ஷிதாபாத் 39.9 சதவீதம் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் உள்ளன.

அடுத்து குஜராத்தின் காந்தி நகர்  39.3 சதவீதம் என்ற அளவிலும், ராஜஸ்தானின் பில்வார மாவட்டம் 36.4 சதவீதம் எனவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேசிய குடும்ப சுகாதார சர்வே4, கடந்த 2015-  -2016-ஆம் ஆண்டில் ஆய்வு நடத்தப்பட்டபோது, இமாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஒரு சிறிய இடைவெளியைத் தவிர்த்தது. குழந்தை திருமணம்  தேசிய சராசரி 11.9 சதவீதமாக குழந்தை திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner