எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 8- நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் உள்ளனர் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள் விக்கு, மத்திய சட்ட இணையமைச்சர் பி. பி. சவுத்தரி எழுத் துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 10 லட்சம் மக்களுக்கு 19. 78 வீதம் நீதிபதிகள் உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு 10 லட்சம் மக்களுக்கு 17. 48 வீதம் நீதிபதிகள் இருந்தனர். கடந்த 2014-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 906-ஆக  இருந்தது. அது தற்போது 1079-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2014-ஆம் ஆண்டு 20,214- ஆக இருந்த மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 22,833- ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணிக்காக பட்டதாரிகள், பொறியாளர்கள் விண்ணப்பம்

சென்னை, பிப். 8- தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர் களுக்கு 4 காலியிடங்களும் இருந்தன.

இந்நிலையில் செப்டம்பர் 26ஆ-ம் தேதி தலைமைச் செய லகம் காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை அளித்தது.

இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கல்வித்தகுதி எதுவும் தேவை இல்லை. மாற்றுத் திறனாளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வேறுபடலாம்.

இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் இருந்து இதற்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

இளங்கலை மற்றும் முதுகலை பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், டிப் ளமோ முடித்தவர்கள் காலியிடங்களுக்காக முண்டியடித்தனர். மொத்தத்தில் 4,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இருந்து 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மீதியுள்ளவர்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப் படுவர் என தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner