எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

-புதுடில்லி, டிச.5 காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அப ராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் வசூலிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந் தோறும் ரூ. 10 கோடியை அப ராதமாக டில்லி அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி காற்று மாசு தொடர் பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தபோது தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner