எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத், டிச.5 குஜராத் மாநிலத்தில் காவலர் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பாக, பாஜக நிர்வாகிகள் இருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, குஜராத் காவல் துறையில் காலியாக இருந்த காவலர் பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டிருந் தது. அதையடுத்து அந்த பணியிடங்களுக்கு தேர்வு எழுது வதற்கு சுமார் 8 லட்சம் பேருக்கு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டது. தேர்வுக் காக 2,440 இடங்களில் தேர் வறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், டிசம்பர் 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருந்த காவலர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அறிக்கை வெளியானது. தேர் வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட் டியே கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த வினாத்தாளை வெளியிட்டது தொடர்பாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

காவலர் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது தொடர்பாக, பாஜக நிர்வாகிகள் மன்ஹர் படேல், முகேஷ் சவுத்தரி, காவல் துறை உதவி ஆய்வாளர் வி.பி. படேல் மற்றும் காவல் துறை முன்னாள் உதவி ஆய் வாளரின் மகள் ரூபல் சர்மா ஆகிய 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி யாஷ்பால் சோலங்கி தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

வதோதரா நகராட்சி நிர் வாகத்தில் தற்காலிக பணியில் இருக்கும் யாஷ்பால் சோலங்கி காவலர் தேர்வுக்கான வினாத் தாளை வெளியிட்டுள்ளார். டில்லிக்குச் சென்று வினாத் தாளில் உள்ள கேள்வி களை முன்கூட்டியே அறிந்து கொண்ட அவர், காவலர் தேர்வு எழுதவிருந்த ரூபல் சர்மா மற்றும் முகேஷ் சவுத்தரி உள்பட பலரிடம் தேர்வுக்கான கேள்விகளைக் கூறியுள்ளார். ரூபல் சர்மா காந்திநகரில் உள்ள விடுதியில் பணியாற்றி வருவதால், அங்கு வைத்து கேள்வி களுக்கான விடைகளை தயார் செய்துள்ளனர். இவர் களுக்கு உள்ளூர் பாஜக நிர் வாகியான மன்ஹர் படேல் உதவி புரிந்துள்ளார்.

 

காவல் துறை உதவி ஆய் வாளர் வி.பி. படேல், பாஜக நிர்வாகியான மன்ஹர் படே லுக்கு தெரிந்தவர் என்பதால் அவருக்குத் தெரிந்தவர்களுக் கும் வினாத்தாள் பகிரப்பட் டுள்ளது. அதையடுத்து வினாத் தாள் வெளியான விவரம் அதி காரிகளுக்குத் தெரிய வந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றார்.

மேலும், வி.பி. படேல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடைநீக்கம் செய் யப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

வினாத்தாள் வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப் பட்ட பாஜக நிர்வாகிகளை கட்சியில் இருந்து விலக் குவதாக அக் கட்சியின் குஜராத் மாநில தலைவர் ஜித்து வாகனி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner