எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், செப்.13 குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத் தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக் கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து தொடர்ச் சியாக உண்ணா நிலை போராட்டம் நடத்தி இருந்து வந்தார்.

அவரது போராட்டம் 13ஆ-வது நாளை நெருங்கிய நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது பட்டினி போராட்டத்தை தொடர்ந்து வந்தார். மருத்துவமனை யில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் தொடர்ந்து உண்ணா நிலையை மேற்கொண்டிருந்த அவர் இன்று இளநீர் அருந்தி தனது பட்டினி போராட்டத்தை முடித்து கொண்டார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை பட்டினி போராட்டத்தை என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக அவ ருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner