எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக. 7- உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்பட்டவருமான நீதிபதி ஜோசப்பின் பணிமூப்பை மத் திய அரசு குறைத்துள்ளதாக மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு, மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் ஆகிய இருவரை நீதி பதியாகத் தேர்வு செய்தது.

இதில் இந்து மல்ஹோத்ரா வின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவ ரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியது.

இதனால், நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதி பதியாகப் பதவி உயர்வு அளிப் பதில் உச்ச நீதிமன்ற கொலீஜி யத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகி யது. பின்னர் 2ஆ-வது முறை யாக கொலீஜியம் கூடியபோது, மீண்டும் கே.எம். ஜோசப்பின் பெயரை பரிந்துரை செய்து அனுப்பியது.

இந்நிலையில், கடந்த 6 மாத இழுபறிக்குப் பின், கொலீ ஜியம் 2ஆ-வது முறையாக அளித்த பட்டியலில் மூத்த நீதிபதிகள் அடிப்படையில் உத்தகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந் திரா பானர்ஜி (கொல்கத்தா), குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் (அலகா பாத்) ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்து அனுப்பி இருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள் ளது. இந்த வாரத்தில் இவர்கள் மூன்று பேரும் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், மத்திய அர சின் அறிவிக்கையில், நீதிபதி கள் இந்திரா பானர்ஜி, வினித் சரண் ஆகியோரின் பெயருக்கு பின், மூத்த நீதிபதி கே.எம். ஜோசப்பின் பெயரை பதிவு செய்து அவரின் பணிமூப்பை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது குறித்து நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டதாகத் தனியார் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அந்த நீதிபதி கூறுகை யில்,  நீண்ட இழுபறிக்குபின், கொலீஜியம் பரிந்துரைத்த ஜோசப் உச்ச நீதிமன்ற நீதி பதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மூத்த நீதிபதியான அவரின் பெயர் அரசின் அறி விக்கையில் பணிமூப்பை பின் பற்றப்படாமல் தரம் குறைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துப் பேச இருக்கிறோம்.

நீதித்துறையில் மத்திய அரசு அப்பட்டமாக தலையிடு கிறது தெளிவாகிறது. நீதிபதி ஜோசப் பெயர்தான் முதன்முத லில் கொலீஜியத்தால் பரிந் துரை செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது, நியமனத்தில் அவருக்குத்தான் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், நீதிபதி ஜோசப்பின் பெயர், நிய மனத்தில் 3ஆ-வதாக குறிப் பிட்டு பணிமூப்பை குறைத்தி ருக்கிறது. ஜூனியர் நீதிபதி களுக்குப் பின் கடைசியாக ஜோசப்பின் பெயர் இருக்கிறது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகி யோர் சமீபத்தில் கொலிஜியத் தால் பரிந்துரைக்கப்பட்டவர் கள். ஜோஸப் 6 மாதங்களுக்கு முன்பே கொலிஜியத்தால் தேர்வு செய்து அனுப்பப்பட்ட வர் எனத் தெரிவித்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner