எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 2 நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை 1ஆ-ம் தேதி ஜி.எஸ்.டி வரி அமல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டியால் நாட்டின் பொரு ளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

இதே நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் நாட்டின் வேலை வாய்ப்பு சீர் குலைந்துள்ளதாக காங்கிரசு குற்றம் சாட்டியுள்ளது. நேற்று டில்லியில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்று மதியாளர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி தங்களது வரிச்சுமையை அதிகரித்துள்ளது என சாமானிய மக்களும் உணர்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது எனவும் சிதம்பரம் கூறினார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner