எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

திருவனந்தபுரம், ஜூலை 1- வரலாற்றில் முதல்முறையாக மாற்றுப் பாலினத்தவருக்கென கூட்டுறவு வங்கியை உருவாக்கி, பினராயி விஜயன் தலைமை யிலான கேரள இடது ஜனநா யக முன்னணி அரசு மீண்டும் ஒரு முன்னுதாரணத்தை படைத் துள்ளது.

கேரள மாநிலத்தில் மாற் றுப் பாலினத்தவரை முன்னேற் றப்பாதைக்கு கொண்டுவரும் நடவடிக்கையாக இந்த கூட் டுறவு வங்கியைத் துவக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்ஜென்டர் கோ-ஆப்ப ரேட்டிவ் சொசைட்டி என்ற பெயரிலான இந்த மாற்றுப் பாலினத்தவர் கூட்டுறவு சங் கம் குறித்து, ஊக்குவிப்புக்குழுத் தலைவர் சியாமா பிரபா கூறியிருப்ப தாவது:

கேரள அரசின் கூட்டுறவுக் கொள்கையில் அறிவிக்கப்பட் டுள்ள, மாற்றுப் பாலினத்தவ ருக்கான கூட்டுறவு சங்கத்தால்- ஒடுக்கப்பட்டுள்ள மாற்றுப்பா லின சமூகம் மிகுந்த மகிழ்ச்சி யில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலமாக மூலதனத்திற்கும், சொந்தமாக தொழில் செய்ய வும் வழி பிறக்கும். ஹோட் டல்கள், கேண்டீன்கள், அழகு நிலையங்கள், டிடிபி மய்யங் கள் போன்ற ஏராளமான சுய தொழில் நிறுவனங்கள் தொடங்க கூட்டுறவு சங்கம் மூலமாக மாற்றுப் பாலினத்தவருக்கு வழி ஏற்பட உள்ளது.

இதுதொடர்பான கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கலையரங்கில் எனது தலைமையில் நடை பெற்றது. மாற்றுப்பாலினத்தவர் என்கிற பேரில் சமூகத்தால் தனிமைப் படுத்துவோருக்கு தங்குமிடத்தையும் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தும்.

மது, போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான பிரச் சாரத்தையும் இச்சங்கம் மேற் கொள்ளும். மாற்றுப்பாலினத் தவர் கூட்டுறவு சங்கத்தின் நட வடிக்கை மாநிலம் தழுவியதாக இருக்கும்.

சங்கத்தின் நடவடிக்கையாக மாற்றுப் பாலினத்தவரான சியா மாஎஸ் பிரபாவை முதன்மை தொழில் முனைவராக கொண்டு ஏழு பேர் கொண்ட ஊக்குவிப் புக் குழு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் முன்மா திரியாக மாற்றுப்பாலினத்தோர் சங்கம் அமைத்திட உதவிய கூட்டுறவுத்துறை அமைச்ச ருக்கு நன்றி கூறுகிறோம். இவ் வாறு சியாம பிரபா கூறியுள் ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner