எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குற்றவாளிகளை பாதுகாக்கும்  ஜார்க்கண்ட்  மாநில பா.ஜ.க. ஆட்சியாளர்கள்

புதுடில்லி, ஜூன் 27 என்ஜிஓ அமைப்பைச் சேர்ந்த பெண்ஊழியர்கள் 5 பேரை, துப்பாக்கி முனையில் மிரட்டி வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில், ஜார்க்கண்ட் மாநில பாஜக ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை தப்ப விடுவதற்கு முயற்சிப்பதாக அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து மாதர் சங்கம் தனதுஅறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜார்க்கண்ட் மாநிலம், குன்தி மாவட்டத்தில் உள்ளது, கோசங்க் கிராமம். ஜார்க் கண்ட் மாநிலத் தலைநகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ள இந்த கிராம மக்களுக்கு இடம்பெயர்தல் மற்றும் மனிதர்கள் கடத்தப் படுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத் துவதற்காக, அரசு சாரா தொண்டு அமைப்பின் பெண் ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்களை சமூக விரோதக் கும்பல்(குண்டர்கள்) துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், இத்தகைய கொடூரச் செயலில் ஈடு பட்ட கயவர்களுக்கு எதிராக, எந்தவொரு குற்ற வழக் கையும் பாஜக அரசு பதியாமல் இருப்பது, ஒட்டுமொத்த சட்டங்களும் செயலிழந்து இருப்பதையும், ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் பாஜகவினர் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் அப்பட்டமாக வெளிக் காட்டுகிறது. குறிப்பாக, குன்தி மாவட்ட நிர்வாகம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. அய்ந்து பெண்களும் கடத்தி அச்சுறுத் தப்பட்டு கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது சாதாரணமாக நடந்தநிகழ்வல்ல.

சட்டத்தைத் தன் கையில்எடுத்துக் கொண்டு, இத்தகைய வன்முறைக் கும்பல்கள் ஆள்கடத்தல்,பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைபோன்ற பல குற்றச் செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சட்டத்தின் மீது எந்தவிதப் பயமும் இல்லை. மாறாக, இவர்கள்அரசியல் தலைவர்களின் மறைமுக ஒப்புதல்க ளோடும் ஆதரவோடும்தான் இத்தகைய குற்றச் செயல் களில் ஈடுபடுகின்றனர். பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அரசியல் ஆதரவாளர்கள் இவர்கள், தங்கள் அமைப்புத் தலைவர்களின் ஒப்புதலோடுதான், கும்பல் வல்லுறவு போன்ற கொடூரத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். சமூகத் தொண்டு மற்றும் களப்பணிகளில் ஈடுபடும் பெண்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய கொடூரச் செயல்கள் அனைத்தும் வன்முறைகளை தூண்டும் முயற்சியே ஆகும்.

அண்மைக் காலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் அனைத்திலும் பாஜக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட உண்மையான குற்ற வாளிகள் காலதாமதமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சாட்சிகளுக் கும் ஜார்க்கண்ட் அரசு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; ஜார்க்கண்ட் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,அனைத்து இயக்கங்களும் உடனடியாக ஒன்று பட்டு மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு மாதர் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner