எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 15- வடமாநிலங் களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய புழுதிப் புயலுக்கு சாவு எண்ணிக்கை 84-ஆக உயர்ந்து உள்ளது.

டில்லி, மேற்கு வங்கம், பீகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரி யானா, சண்டீகர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம், மேகாலயம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு புழுதிப் புயல் வீசியது. அதைத் தொடர்ந்து இடி-மின் னலுடன் கூடிய கனமழையும் பெய்தது.

இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: உத்தரப் பிரதேசத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதற்கடுத்து மேற்கு வங்கத் தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆந்திரம் (12), டில்லி (2), உத்தரகண்ட் (1), பிகார் (4) ஆகிய இடங்களில் மொத் தம் 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதுதவிர, வடமாநிலங் களில் மொத்தம் 136 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 123 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். டில்லி (11), உத்தரகண்ட் (2) ஆகிய மாநி லங்களைச் சேர்ந்த 13 பேரும் காயமடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்ச கத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரப் பிர தேசம், ராஜஸ்தான், தெலங் கானா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த 12 நாள்களுக்கு முன்பு வீசிய புழுதிப் புயலுக்கு மொத்தம் 134 பேர் பலியாகினர்; 400க் கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். அப்போதும் உத் தரப் பிரதேசத்தில்தான் அதி கப்பட்சமாக 80 பேர் உயிரி ழந்தனர். அவர்களில் பெரும் பாலானோர், ஆக்ரா நகரைச் சேர்ந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி மீண்டும் புழுதிப் புயல் வீசியது. அந்தப் புய லில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner