எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவனந்தபுரம், ஏப்.15  காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள வீடுகளில் இடைத்தேர்தலுக்காக வாக்கு கோரி பாஜகவினர் உள்ளே வராதீர் , இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள் என்று நோட்டீஸ் எழுதி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உ.பி. பலாத்கார சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை கதவின் வெளியே மாட்டிவைத்துள்ளனர்.

ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள நோட்டீஸ்களில் உள்ள எழுத்துகளில் வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner