எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மார்ச் 11 கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி மர்ம நபர் களால் சுட்டுக் கொல் லப்பட்டார். உளவுப் பிரிவு அய்.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.அய்.டி.) காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை காவல் துறை வெளியிட்டும் இதுவரை கொலையில் எந்த துப்பும் துலங்க வில்லை.

கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக பிரவீன் குமார் என்பவரை கடந்த மாதம் 18ஆ-ம் தேதி காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பெயர் பிரவீன்குமார் என்பதும், இந்து யுவசேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner