எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மார்ச் 9 காவிரி மேலாண்மை வாரியத்தை தாமத மின்றி அமைக்க வேண்டும் என்று, புதுச்சேரியில் வியாழக் கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

டில்லியில் காவிரி நீர் தொடர் பாக 4 மாநில தலைமைச் செயலர் களுடனான கூட்டம் வெள்ளிக் கிழமை (மார்ச் 9) நடை பெற உள்ளது.  இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலி யுறுத்து வதற்காக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் நாராயண சாமி அழைப்பு விடுத்திருந்தார். இதை யடுத்து, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதல்வர் நாராயண சாமி, பேரவைத் தலை வர் வைத்திலிங்கம், பொதுப் பணித் துறை அமைச்சர் நமச் சிவாயம், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உறுப்பி னர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: உச்ச நீதிமன் றம் அறிவித்துள்ளபடி, காரைக் கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலங் களுக்கான மாதாந்திர நீர்ப் பங்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

கூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்றும், அவ்வாறு நிறைவேற்றா விட்டால், அடுத்ததாக அனைத் துக் கட்சி பிரதிநிதிகளையும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை யும் டில்லிக்கு அழைத்துச் சென்று புதுவை அரசின் கோரிக் கையை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றார் நாராயணசாமி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner