எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, பிப்.13  கருநாட கத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை நடை பெற்ற பா.ஜனதா அரசு, இங்கு ஊழலில் உலக சாதனை படைத்தது என காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

கருநாடக சட்டசபைக்கு விரை வில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி,  கரு நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குஸ்டகியில் நடை பெற்ற பிரசார பொதுக்கூட்டத் தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருநாடகத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பா.ஜனதா அரசு, இங்கு ஊழலில் உலக சாதனை படைத்தது. அப்போது எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய மூன்று முதல்- வர்களை இந்த மாநிலம் கண்டது. ஊழல் புகா ரில் 4 அமைச்சர்கள் பதவியை இழந்து சிறைக்கு சென்றனர்.

ஆனால் பிரதமர் மோடி கருநாடகத்திற்கு வந்து ஊழல் ஒழிப்பு பற்றியும், பா.ஜன தாவை ஆதரிக்குமாறும் பேசு கிறார். மாநிலத்தில் சித்தரா மையா தலைமையில் காங் கிரசு ஆட்சி அமைந்தது.

ஊழல் இல்லாத ஆட்சி நிர் வாகத்தை எங்கள் கட்சி நடத்தி இருக்கிறது.

மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதி களையும் எங்கள் கட்சியின் ஆட்சி நிறைவேற்றி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். சொன்னபடி வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்படவில்லை.
இதனால் நாட்டில் இளை ஞர்களுக்கு வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் இளைஞர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள் ளனர் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner