எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கோரக்பூர், பிப்.12  உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 மக்கள வைத் தொகுதிகளுக்கும், பீகாரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், வரும் மார்ச் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

உத்தரப் பிரதேசத்தில் கோராக் பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. யாக இருந்த யோகி ஆதித்ய நாத்தும், பூல்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த கேசவ பிரசாத் மெரியாவும் முறையே முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்ற பிறகு தங்களது எம்.பி. பதவியை   விட்டு விலகினர். அதையடுத்து, அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன.

பீகாரில் அராரியா மக்கள வைத் தொகுதி எம்.பி.யான முகமது தஸ்லீமுதீன் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அதையடுத்து, அவரது தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் மார்ச் 11-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

உத்தரப் பிரேதசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பாஜக சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இதுவாகும். இதேபோல், பீகாரில் காங்கிரசு -ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான மகா கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் வெளியேறிய பிறகு, பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்த பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இதுவாகும்.

எனவே, இந்த 3 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல், பாஜகவுக்கும், நிதீஷ் குமாருக்கும் முக்கியமான தாகக் கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner