எழுத்துரு அளவு Larger Font Smaller Font


போபால், டிச.7 காந்தியாரின் படத்தை தவறாக சித்தரித்ததுகுறித்து காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவில்  மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

பங்கஜ் சதுர்வேதி

மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது:

ராகுல் காந்தி காங்கிரசு கட்சியின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய் யும் படத்தை வெளியிடும்போது அப் படத்தின் பின்னணியில் சித்தரிக்கப் பட்ட படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

சிலர் காந்தி படத்தை முகலாயப் பேரரசர்போல் சித்தரித்துள்ளனர்.

இதுபோன்று காந்தியார் படத்தை சித்தரித்து வெளியிடுவது காந்தியாரை இழிவுபடுத்துவதாகும். காங்கிரசு கட்சியின் மூத்த தலை வர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கில் இது போன்று சித்தரிக்கிறார்கள். காந்தியார் படத்தை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டது குறித்து காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத் துள்ளோம் என்றார்.

இதேபோல், சமூக ஊடகங்களில், நேருவுடன் காந்தி பேசும் காட்சி உள்ள படத்தில் காந்திக்கு மிக அருகில் நேரு படம் இருந்த இடத்தில் ஒரு பெண்ணின் படத்தை வெளியிட்டு, அப்பெண் முத்தமிட நெருங் குவது போன்று காந்தியை இழிவு படுத்தும் நோக்கில் சித்தரிக் கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வெளி யாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

மத்தியப்பிரதேச மாநில  சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கண் காணிப்பாளர் சைலேந்தர சிங் சவுகான் புகாரைப்பெற்றுக்கொண்டு உரிய நட வடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner