எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஒடிசா, டிச.6 எதிரிகளின் இலக் குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்ல அதிவேக ஆகாஷ் ஏவுகணையானது ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை வெற்றி கரமாக சோதிக்கப்பட்டது.

முழுக்க, முழுக்க உள் நாட் டில் தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணையானது ராணுவத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 720 கிலோ எடை கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. மொத்தமாக 55 கிலோ எடை வரையிலான வெடி பொருள்களை சுமந்து திறனும் உடையது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடி வமைக்கப்பட்ட ஆகாஷ் ஏவு கணையை தரையில் இருந்து இயக்கி விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும். குறிப்பாக எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக அழிக்க இயலும்.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் அமைந் துள்ள பாதுகாப்புப் படை சோத னை தளத்தில் ஆகாஷ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை சோதனைக் குட்படுத்தப்பட்டது.

அதன் செயல்பாடுகள் அனைத்தும் ரேடார், தொலை யுணர் கருவிகள் வாயிலாக கண்காணிக்கப்பட்டன.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஆகாஷ் ஏவுகணை மிகச் சரியாகத் தாக்கி அழித்தது. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner