எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவனந்தபுரம், அக்.10 கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின்கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின்கீழ் இயங்குகின்றது.

கடந்த வாரம், பார்ப்பனர் அல்லாத 36 பேர் இக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக 6 தாழ்த்தப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். நாடு முழுவதும் இந்த நியமன அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. கேரள அரசை பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், திருவில்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோவிலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான யது கிருஷ்ணன் என்பவர் நேற்று  அர்ச்சகராக தனது பணியை தொடங் கினார். தன்னுடைய குருநாதரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னர் அவர் கருவறைக்குள் நுழைந்து பூஜைகள் செய்தார்.

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணன் முதுநிலை பட்டத்தில் சமஸ்கிருதத்தைப் பாடமாக எடுத்து இறுதியாண்டு படித்து வருகிறார். தனது 15 வயது முதலே வீட்டின் அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்து வந்ததாகவும், பின்னர் முறைப்படி சமஸ்கிருதம் கற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி 81 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இதே நேரத்தில், யது கிருஷ்ணன் கருவறைக்குள் நுழைந்துள்ளது நிஜமாகவே சமூக புரட்சிதான்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner