எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, செப்.11 ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் நடவடிக்கை ஒரு தவறான முடிவு என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளதா? என்று முன்னாள் மத்தியநிதியமைச்சரும்,காங் கிரசு கட்சியின் மூத்த தலை வருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாகஅவர் மும்பையில் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

நமதுபொருளாதாரம்தற் போது சந்தித்து வரும் பெரும் பாலான பிரச்சினைகளுக்கு ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் நடவடிக்கைதான் காரணம். இந்த நடவடிக்கை யின் விளைவாக 1.5 லட் சம் வேலைவாய்ப்புகள்பறி போனதோடு, மொத்த உள் நாட்டு உற்பத்தியிலும் 1.4 சதவீதம் என்ற அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு தைரியம் தேவை யில்லை. ஆனால், “நான் ஒரு தவறான முடிவை எடுத்தேன்'' என்று ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவை. ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் என்பது தவறான முடிவாகும். “அந்தத்தவறைநான்செய்து விட்டேன்'' என்று ஒப்புக் கொள் ளும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டன? மறைமுகமாக மத்திய அரசு தனது தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரதொழில்துறைஅமைச் சர்கல்ராஜ் மிஸ்ரா நீக்கப் பட்டார். திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நீக்கப்பட் டார். இதற்கு திறன் மேம் பாட்டு லட்சியமும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்றுதான் அர்த்தம். தொழிலாளர் நலக் கொள்கைகள் தோல்வியடைந்ததால்தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார்.

நாடுதற்போதுமிகமோச மான பொருளாதார நெருக்கடி யைச் சந்தித்து வருகிறது. அரசின் தவறான கொள்கைகளின் சுமையைஇளைஞர்கள்அனு பவித்துவருகின்றனர்.ஆண்டு தோறும் 1.2 கோடி பேர் வேலைவாய்ப்புக்குத்தயாரா கின்றனர். ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படுவதில்லை.

கடந்த வாரம் நடை பெற்ற அமைச்சரவை மாற்றத் தின்போது மேலும் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.குறிப்பாகவேளாண் துறையில் ஏற்பட்ட தோல்வி களைத் தொடர்ந்து அத்துறை அமைச்சரின் பதவியைப் பறித் திருக்க வேண்டும். அதேபோல் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நீக் கப்பட்டிருக்க வேண்டும்.

பொருளாதார நிலைமையை முன்வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரு வீர்களா? என்று கேட்கிறீர்கள். பிரதமரை பதவி விலகுமாறு கோருவது சுலபமல்ல.

தொழில்துறை,திறன்மேம் பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தரத்தொழில்துறைஆகிய வற்றின் கொள்கைகள் தோற்று விட்டன என்று கருதியதால்தான் அத்துறைகளை கவனித்து வந்த 3 அமைச்சர்களை பிரதமர் நீக்கி யுள்ளார் என்றார் சிதம்பரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner