எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, செப்.7

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கருநாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் பற்றி முதல்வர் சித்தராமையா உயர் அதிகாரி களுடன் நேற்று காலை அவசர ஆலோ சனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கவுரி லங்கேஷ் கொலை செய்யப் பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க அய்.ஜி. தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு (எஸ்.அய்.டி.) அமைத்து உத்தரவிட் டுள்ளேன்.

கவுரி லங்கேஷ் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரு டைய தந்தை காலத்தில் இருந்து கவுரி லங்கேஷ் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். கவுரி லங்கேஷ் வீட்டில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் ஒருவர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகி யுள்ளது. இதுதொடர்பாக சில துப்பு கிடைத்துள்ளது.

கவுரி லங்கேஷ் கொலையை கொண் டாடும் விதமாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

கவுரி லங்கேஷ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் விழிக்கொடைப் பதிவு செய்திருந் ததால் முன்னதாக, டாக்டர்கள் அவரது கண்களை எடுத்துச் சென்றனர். முதல்வர் சித்தராமையா அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார். அவரது தாயார் மற்றும் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார்.

அமைச்சர்கள், நடிகர் பிரகாஷ்ராஜ், முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கன்னட திரையுலகினர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

சாம்ராஜ்பேட்டையில் உள்ள சுடு காட்டில் துப்பாக்கி குண்டுகள் முழங்க கவுரி லங்கேஷின் உடல் அரசு மரியா தையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட் டதை கண்டித்து பெங்களூருவில் பத்திரி கையாளர்கள், எழுத்தாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner