எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, ஆக.31 உச்ச நீதிமன்ற நீதிபதி பிரபுல்லா சந்திர பந்த் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யுடன் சேர்த்து, அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 31 ஆகும். அதில் 4 இடங்கள் காலியாக இருந்தன. இதனால் 27 நீதிபதிகள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து, நீதிபதி பந்த் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதையடுத்து, நீதிபதி பதவிகளில் காலி யாக இருக்கும் இடங்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, உச்ச நீதி மன்றத்தில் தற்போது பணிபுரியும் நீதிபதி கள் எண்ணிக்கை 25ஆகக் குறைந்தது.

உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலிஜீயம் அமைப்பு, மத்திய அரசுக்கு அளிக்கும். அதன்மீது பரிசீலனை நடத்தி, மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும். இதன்படி, புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரைக்காக மத்திய அரசு காத்தி ருக்கிறது' என்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு, உச்ச நீதிமன் றத்தில் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்த யாரும் நீதிபதி பதவியில் இல்லை. எஸ்.டி. வகுப் பைச் சேர்ந்த யாரும் இதுவரை உச்ச நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மட்டுமே பெண் நீதிபதியாவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner