எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 12- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17இல் தொடங்கியது. மக்களவையில் மெத்தம் 19 நாட்கள் நடந்த இந்த கூட்டத் தில் 14 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடிய ரசுத் தலைவர் தேர்தலும் இந்த கூட்டத்தொடரின் போதுதான் நடந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவும் நடந்தது. சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்து வீசிய தற்காக 6 காங்கிரசு எம்பிக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட் டனர். மக்களவை செயல்பாடு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், மொத் தம் 71 மணி நேரம் மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. 29.58 மணி நேரம் எதிர்க்கட்சிகள் அமளியால் வீணானது. அதற்காக கூடுதலாக 10.36 மணி நேரம் அவை நடத்தப்பட்டது என்றார்.

இதே போல் மாநிலங்க ளவை மொத்தம் 80 மணி நேரம் நடந்தது. 25 மணி நேரம் அமளியால் வீணாணது.

இரண்டு புதிய உறுப்பி னர்கள் பதவி ஏற்றனர். அதே சமயம் மாயாவதி, வெங்கையா நாயுடு ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner