எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், மே 17 குஜராத் கூட்டுறவு சங்கத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. கடந்த மாதம் மோடி இங்கு வந்து பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை துவக்கி வைத்தும், விவசாயிகளின் ஆதரவைப் பெறமுடியவில்லை.

குஜராத் மாநில விவசாய கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாயின. சுமார் 20 ஆண்டுகளாக பாஜக வசமிருந்த குஜராத் விவசாய கூட்டுறவு சங்க நிர் வாகம் தற்போது முற்றிலும் காங்கிரஸ் கைகளுக்கு மாறியுள்ளது.    அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விவசாய கூட்டுறவு சங்க தேர்தல் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் நேரத்தில் குஜராத் வருகை புரிந்த மோடி பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை அறிமுகப்படுத்திவைத்தார். சவுராஷ்டிர நர்மதா அவதாரன் சிச்சாய் பரியோஜனா என்ற பெயரில் நர்மதா நதி நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் விவசாயிகளின் ஆதர வைப் பெற்று கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவில் இருந்தார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு...

ஆனால், தேர்தலில் முடிவு வேறு மாதிரி அமைந்தது, இந்த தேர்தலில்  அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று குஜராத் விவசாய கூட்டுறவு சங்கங்களை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில பாஜக செயலாளரும் கூட்டுறவு சங்கத்தில் மிகவும் முக்கிய பொறுப்பை வகிக்கும் ஜிதின் ரோஹா (இவரும் தோல்வியைச் சந்தித்தார்) பதவியை இழந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவரான பிகா லலியா-வை தேர்தல் அதிகாரி முன்னிலையில் கன்னத்தில் அறைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

இந்தத் தேர்தல் தோல்வி பற்றி குஜராத் பாஜக கூறியதாவது,

நாங்கள் இந்த ஆண்டின் இறுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முழு கவனம்செலுத்தி வருகிறோம். ஆகை யால், இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்த லில் தோல்வி அடைந்தோம் என்று கூறியுள்ளது.

எபிஎம்சி என்று அழைக்கப்படும் கூட்டுறவு சங்கங்கள் குஜராத் விவ சாயிகளின் முழுமையான பங்களிப்பை கொண்ட ஒரு அமைப்பாகும், இந்த அமைப்பு விவசாய விளைபொருள் உற்பத்தி முதல் கொள்முதல் வரை முழுமையாக விவசாயிகளைச் சார்ந் துள்ள ஓர் அமைப்பாகும். இந்த ஆண்டுத் தேர்தலில் பாட்டிதார் அமைப்பான பாட்டிதான் அன்மான் ஆந்தோலன் என்ற அமைப்பு காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது, இந்த அமைப்பு இத்தனை ஆண்டுகளாக பாஜகவிற்கு ஆதரவு அளித்துவந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

இந்த ஆண்டில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புறங்களைத் தவிர்த்த பெருவாரியான பகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது. அங்கு காங்கிரஸ் வலுவான கட்சியாக திகழ்ந் தது. தற்போது விவசாய கூட்டுறவு சங்கத் தேர்தலில் கிடைத்த இந்தத் தோல்வி வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner