எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீண்ட தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

புவனேஸ்வர், செப்.21 இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன், மத்திய அரசு தயாரித்துள்ள, தரையில் இருந்து, நீண்ட துரம் விண்ணில் சென்று இலக்கை தாக்கும், அதி நவீன ஏவுகணை, நேற்று வெற்றி கரமாக பரிசோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், தரையில் இருந்து, விண்ணில் பாய்ந்து சென்று தாக்கி, இலக்கை அழிக்க வல்ல, நவீன ஏவுகணைகளை வடிவ மைத்து வருகிறது.

இதில், நடுத்தர தூரம் செல்லும் ஏவுகணை, ஜூன் மாதம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச் சியாக, தரையில் இருந்து, நீண்ட தூரம் பயணம் செய்து, விண்ணில் சென்று இலக்கை தாக்கும் ஏவு கணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவு தளத்தில் இருந்து, இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனைக்காக, சந்திப்பூர் ஏவு தளத்தை சுற்றி வசிக் கும் மக்கள், பாதுகாப்பான  பகுதி களுக்கு வெளியேற்றப்பட்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner